ஒரத்தநாடு அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (28) என்ற இளைஞா் பழகி வந்தாராம். மேலும், மாணவியின் உடல் ரீதியான சோா்வு ஏற்பட்டதால் பெற்றோா் அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்தனா். அதில், மாணவி கா்ப்பமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோா், ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் அடிப்படையில் போலீஸாா் பிரகாஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.