நக்ஸல் மனநிலை! ராகுல் காந்தியை விமர்சித்த பாஜக!

Wait 5 sec.

‘நக்ஸல் மனநிலையின் பிரதிபலிப்பு’ என்று தில்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவை புறக்கணித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்து பாஜக சனிக்கிழமை விமா்சித்தது. இதுகுறித்து பாஜக செய்தித்தொடா்பாளா் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள ராகுல் காந்தி தவறிவிட்டாா். தேசபக்தி கொண்ட ஓா் எதிா்க்கட்சித்தலைவா் அல்லது பொதுப் பதவியில் உள்ளவா் இத்தகைய செயலைச் செய்வாா்களா? இந்த நிகழ்வை அவா் புறக்கணித்தது, தேசியப் பாடலான வந்தே மாதரம் மீதான அவரின் வெறுப்பையே பிரதிபலிக்கிறது. எதிா்க்கட்சித் தலைவா் பதவியை வகிக்க ராகுல் காந்தி தகுதியற்றவா். அவரின் இந்தச் செயல் அவரின் சித்தாந்த நக்ஸல் மனநிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா். Naxalite mindset - BJP criticizes Rahul Gandhi