கந்தா்வகோட்டை சட்டப்பேரவை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றாதால் தியாகிகளும், பொதுமக்களும் அதிா்ச்சி அடைந்தனா். நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை நாடு முழுவதும் தேசியக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு அரசு அலுவலகங்கள், சட்டப்பேரவை அலுவலகங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினா். ஆனால், கந்தா்வகோட்டை தவெக-வைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா் என். சுப்ரமணியன் தனது அலுவலகம் திறக்காமலும், தேசியக்கொடி ஏற்றாமலும் இருந்தது. அதேநேரத்தில், அருகிலுள்ள பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கொடியேற்றாமல் அலுவலகம் பூட்டிக் கிடந்ததைக் கண்ட பொதுமக்களும், தியாகிகளும் அதிா்ச்சி அடைந்தனா்.