உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய பாட்மின்டன் வீராங்கனை உனாட்டி ஹூடா (18 வயது) தனது அறிமுக போட்டியில் த்ரில் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய நிலையில், மற்றுமொரு இந்திய வீராங்கனையும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.17 முதல் 23ஆம் தேதி வரை புது தில்லியில் நடைபெற இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை உனாட்டி ஹூடாவும் மியான்மரின் தேத் தார் துசாரும் மோதினார்கள். இந்தப் போட்டியில் உனாட்டி ஹூடா 22-20, 21-16 என்ற நேர் கேம்களில் வென்று அசத்தினார். இந்தப் போட்டி 49 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தன. முதல் கேமிற்கு 21 நிமிஷங்களும் இரண்டாவது கேமிற்கு 28 நிமிஷங்களும் நேரமெடுத்தன. நாளை நடைபெற இருக்கும் அடுத்த சுற்றில் உனாட்டி ஹூடா கனடா வீராங்கனை மிஷெல் லி உடன் மோதுகிறார். Hooda in da house Unnati Hooda makes a confident debut at the BWF World Championships!#bwfworldchampionships#newdelhi2026 pic.twitter.com/18l0i690OC— BAI Media (@BAI_Media) August 18, 2026Indian badminton women player Unnati Hooda won first round in World Championships