மாணவர்களுக்கான உதவித் தொகையை வழங்காமல் அவர்களின் எதிர்காலத்தை தவெக அரசு கேள்விக்குறியாக்கியுள்ளது என திமுக எம்பி கனிமொழி செவ்வாய்க்கிழமை (ஆக. 18) தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலுள்ள உயர்கல்வி நிலையங்களில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகையை வழங்காமல், அவர்களின் எதிர்காலத்தை தவெக அரசு கேள்விக்குறியாக்கியுள்ளது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காக, இதையும் திட்டமிட்டு மறைமுகமாக செயலிழக்கச் செய்து நிறுத்துவதுதான் இந்த அரசின் நோக்கமா? உடனடியாக நிலுவையிலுள்ள உதவித்தொகையை விடுவித்து, மாணவர்களின் கல்வியைத் தடையின்றி தொடரச் செய்ய வேண்டும் என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலுள்ள உயர்கல்வி நிலையங்களில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகையை வழங்காமல், அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது…— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 18, 202614 முதல்வர்கள் மீது தீவிர குற்றவியல் வழக்குகள்! பட்டியலில் விஜய்! முதலிடம் யாருக்கு?DMK MP Kanimozhi stated on Tuesday (Aug. 18) that the TVK government has jeopardized the students' future by failing to provide them with scholarships.