சப்பாத்தி மீந்துவிட்டால் இப்படி செய்து பாருங்கள்!

Wait 5 sec.

சப்பாத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் ஓர் ஆரோக்கியமான உணவு. சில நேரங்களில் வீடுகளில் செய்யும் சப்பாத்தி மீந்துவிடும். அப்படி சப்பாத்தி மீந்துவிட்டால் அதனை பல வகைகளில் சூடாகச் சாப்பிடலாம். சப்பாத்தி - முட்டை கொத்து மீந்துபோன சப்பாத்தியை ரோல் செய்து பின்னர் அதனை சிறிதுசிறிதாக நறுக்கிக்கொள்ளவும். இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து பொரியவிட்டு பின்னர் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அத்துடன் ஒரு சிறிய தக்காளியை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது உங்களுக்குத் தேவையான மசாலாக்களைச் சேர்த்துக்கொள்ளலாம். சப்பாத்தி அளவுக்கு ஏற்ப ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள், சிறிதளவு கரம் மசாலா, தேவைப்பட்டால் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி பின்னர் அதில் முட்டையை ஊற்றி வேகவிடவும். முட்டை நன்றாக வெந்து வந்ததும் அதனை நன்றாக கிளறி முட்டை மசாலா பதம் அளவுக்கு கொண்டு வரவும். தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறியதும் இறுதியாக நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்தியை சேர்த்து ஓரிரு நிமிடங்களில் இறக்கிவிடவும். சிறிது மல்லித் தழைகளை மேலே தூவிவிடவும். சூடான சப்பாத்தி - முட்டை கொத்து ரெடி!இதேபோல சப்பாத்தியை நறுக்கி முட்டைக்குப் பதிலாக காய்கறிகள் சேர்த்து மசாலா சேர்த்து வதக்கி சாப்பிடலாம். Food recipe: chappathi egg kothu