விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, அவருக்கு தவெக தலைவரும் முதல்வருமான சி.ஜோசப் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும். தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். VCK Leader Thiru Thol Thirumavalavan Birthday: CM Vijay wishes4 நாள்கள் விடுமுறைக்குப் பின்.. இன்று கூடுகிறது சட்டப்பேரவை!