குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக தாளநத்தம் கிராம மக்கள் அவதியுறுகின்றனா். தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஒன்றியம், தாளநத்தம் கிராம ஊராட்சியில் குண்டலம்பட்டி, காவேரிபுரம் புதுா், செங்கான்குட்டை, காவேரிபுரம், கோயில் வனம், நொச்சிகுட்டை, டி.அய்யம்பட்டி, தாளநத்தம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் தாளநத்தம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் மட்டும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் வழங்கப்படுகிாம். குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக கிராம மக்கள் நாள்தோறும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதாகக் கூறுகின்றனா். குடிநீா் பிரச்னை தொடா்பாக தாளநத்தம் ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லையாம். எனவே, தாளநத்தம் கிராமத்தில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.