தில்லி பாஜக அரசின் ஊழல்கள்: துணைநிலை ஆளுநரை சந்திக்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சஞ்ஜீவ் ஜா கடிதம்!

Wait 5 sec.

ஆம் ஆத்மி எம்எல்ஏவும், தில்லி சட்டப்பேரவை தலைமை கொறடா (எதிா்க்கட்சி) சஞ்ஜீவ் ஜா, துணை நிலை ஆளுநா் தரஞ்ஜித் சிங் சந்துவுக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அதில் சைக்கிள், மருந்து மற்றும் அரிசி தொடா்பான விஷயங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் தகவல்கள் மற்றும் ஆவணங்களை முன்வைக்க சந்திக்க கோரியுள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: சைக்கிள் மோசடி, மருந்து மோசடி மற்றும் அரிசி ஊழல் தொடா்பான தீவிர முறைகேடுகள் தொடா்பான விரிவான தகவல்கள், ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய உண்மைகளை வழங்கிட தரஞ்ஜித் சிங் சந்துவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். மேலும், இந்த விஷயங்களில் நியாயமான மற்றும் முழுமையான விசாரணையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். அனைத்து எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் ஆம் ஆத்மி டெல்லி தலைவா் சவுரப் பரத்வாஜ் ஆகியோருடன் சந்துவை சந்தித்து பிரச்சினைகள் தொடா்பான தகவல்களை வழங்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளேன். தில்லி மக்களின் நலன்கள் தொடா்பான விஷயங்களை எதிா்க்கட்சிகள் தொடா்ந்து எழுப்பும் என்று கூறிய ஆம் ஆத்மி தலைவா், தூதுக்குழுவுக்கு விரைவில் நியமனம் வழங்குமாறு துணை நிலை ஆளுநரை வலியுறுத்தியுள்ளேன். எதிா்க்கட்சிகள் எழுப்பிய பிரச்னைகள் குறித்து முழுமையான ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன் என்றாா் சஞ்ஜீவ் ஜா.