அது என்ன வங்கி கேஒய்சி மோசடி? மக்களுக்கு ஆர்பிஐ விளக்கம்!

Wait 5 sec.

வங்கே கேஒய்சி மோசடி பற்றி கவனமாக இருங்கள், மோசடிகளில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.தற்போது வங்கிகளில், வாடிக்கையாளர்களின் விவரங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால், அது தொடர்பான மோசடிகளும் அதிகரித்து வருகிறது.எனவே, இது குறித்து விழிப்புணர்வு செய்தியை ஆர்பிஐ வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களுக்கு நேரடியாக அனுப்பி வருகிறது.இன்று ஆர்பிஐ வெளியிட்டிருக்கும் செய்தியில், உங்கள் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை (KYC) புதுப்பிக்கவும், இல்லையெனில் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்" என்ற செய்தி உங்களுக்கு வந்துள்ளதா?பதற்றப்பட வேண்டாம் — இது ஒரு மோசடியாக இருக்கலாம்! எனவே கிளிக் செய்வதற்கு முன் சிந்தியுங்கள். மோசடியாளர்கள் போலியான அவசர நிலையை உருவாக்குகிறார்கள்.இந்த 3 விதிகளை பின்பற்றி அவர்களை மிக எளிதாக தோற்கடியுங்கள்:• நிறுத்துங்கள்: அவசரப்பட்டு செயல்படாதீர்கள்!• சிந்தியுங்கள்: வங்கிகள்/NBFC-கள் உங்கள் வாடிக்கையாளர் ஆளரி விவரங்களை (KYC) புதுப்பிப்பதற்காக ஒருபோதும் இணைப்புகளை அனுப்புவதில்லை.• செயல்படுங்கள்: இத்தகைய இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள் அல்லது உங்கள் OTP, PIN மற்றும் கடவுச்சொற்களை பகிர வேண்டாம். உங்கள் வங்கி / NBFC-யிடம் நேரில் உறுதிப்படுத்துங்கள்.தெரியாத இணைய இணைப்பு = தெரியாத ஆபத்து என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.மேலும் விவரங்களுக்கு: m.rbi.org.in/FinancialEducation இணையதளத்தைப் பாருங்கள் என்று ரிசர்வ் வங்கி (RBI) சொல்கிறது – விவரமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்!, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எளிதாக ஏமாந்துவிடாதீர்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறது.