நாமக்கல்: மறைந்த எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதியின் மனைவி செல்லம்மாள் வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் புதன்கிழமை (ஆக. 19) இரவு காலமானார். அவருக்கு வயது 85.நாமக்கல்-மோகனூர் சாலை கொண்டிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிசவாதியும், மூத்த எழுத்தாளருமான சின்னப்பபாரதி. சங்கம், பவளாயி, சுரங்கம், தாகம் உள்ளிட்ட நாவல்களை எழுதியவர். இவருடைய நாவல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர், கடந்த 2022 ஜூன் 13 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய மனைவி செல்லம்மாள், மகள்கள் கல்பனா, பாரதி. சின்னப்பபாரதி மறைவுக்குப் பிறகு தன்னுடைய மகள் கல்பனா வீட்டில் செல்லம்மாள் வசித்து வந்தார். இந்த நிலையில் புதன்கிழமை இரவு 10 மணி அளவில் வயது முதிர்வு காரணமாக அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணி அளவில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: 94422-64733.Namakkal: Chellammal, wife of the late writer Ku. Chinnappa Bharathi, passed away on Wednesday (Aug. 19) night due to old age and ill health. She was 85.