தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! வெள்ளி விலை? ஆக. 20 விலை நிலவரம்!

Wait 5 sec.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் இன்று(ஆக. 20) பவுனுக்கு ரூ. 1,600 உயர்ந்துள்ளது.கடந்த சில நாள்களாக, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது. தங்கம் விலை கடந்த ஆக.17-இல் பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.1,14,160-க்கும், ஆக.18-இல் பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.1,14,320-க்கும் விற்பனையானது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை(ஆக.19) ஒரே நாளில் இறங்கி, ஏறி கிராம் ரூ.14,400-க்கும், பவுன் ரூ.1,15,200-க்கும் விற்பனையானது.இந்நிலையில், வியாழக்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,600-க்கும், பவுனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,16,800-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.10,000 உயர்ந்து ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.Gold prices rebound and surge sharplyஆகஸ்ட் முதல் பாதியில் இந்தியப் பங்குகளில் ரூ.16,621 கோடி அந்நிய முதலீடு