முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என அமைச்சர்கள் சிலர் சட்டப்பேரவையில் பேசினர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் பேசியதாவது, "விஜய் பிரதமரானால் நானும் மத்திய அமைச்சராகி விடுவேன் என காங்கிரஸ் தொண்டர்களும்தான் கூறுகின்றனர். இதையெல்லாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.ராகுல் காந்திதான், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் முகம். தமிழகத்தில் இந்தக் கூட்டணியின் முகம் விஜய். தவெக ஆட்சியமைக்க முதல் ஆதரவை வழங்கியது காங்கிரஸ் கட்சிதான்.ஆகையால், தொண்டர்களின் விமர்சனங்களையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்று தெரிவித்தார்.மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருந்து வருகிறார். இந்த நிலையில், தமிழக முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர் சட்டப்பேரவையில் கூறினார். தவெகவும் காங்கிரஸும் கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில், அமைச்சரின் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் பதிலளித்துள்ளார்.4 மாதங்களில் 22 மரண தண்டனை! ஒரு நீதிபதியால் 100 கொலை வழக்குகள் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்Is CM Vijay becoming Prime Minister? Congress Chief Manickam Tagore responds