நேர் கேம்களில் வென்ற பிவி சிந்து..! காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தேர்வு!

Wait 5 sec.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் பிவி சிந்து நேர் கேம்களில் வென்று மூன்றாவது சுற்றுக்குத் தேர்வாகி அசத்தியுள்ளார். உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.17 முதல் 23ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.முதல் போட்டியில் பிவி சிந்து சோபியா நோபலை 21- 7, 21-11 என நேர் கேம்களில் வென்றிருந்தார். தற்போது இரண்டாவது சுற்றில் கனடாவின் வென் யூ ஜாங் உடன் மோதினார். இந்தப் போட்டியில் பிவி சிந்து 21-16, 21-17 என நேர் கேம்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அடுத்த சுற்றில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையுடன் பலப்பரீட்சையில் ஈடுபடவிருக்கிறார். வெற்றிக்குப் பிறகு ரசிகர்களுக்கும் குட்டி ரசிகைகளுக்கும் பிவி சிந்து ஆட்டோகிராப் அளித்தார். அரங்கில் இருந்த பலரும் பிவி சிந்துவிற்கு உற்சாகத்தை அளித்தார்கள். Superstar for a reason! PV Sindhu's quest for another Worlds medal stays on track as she comes through in straight games and enters the round of 16. A super match awaits us against world No 3 Wang Zhi Yi #SmashForIndia #BWFWorldChampionships #NewDelhi2026 pic.twitter.com/OGF9YHCdAY— BAI Media (@BAI_Media) August 19, 2026PV Sindhu wins in straight games! Advances to the third round!