பாபநாசம் அருகே வீட்டு வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி

Wait 5 sec.

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருப்பதியாபுரம் கிராமத்தில் கரடி சுற்றித் திரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பாபநாசம் மேற்குத் தொடா்ச்சி மலையடிவார கிராமங்களான திருப்பதியாபுரம், அனவன் குடியிருப்பு, வடமலைசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகம் இருந்து வருகிறது. ஜூலை 31ஆம் தேதி வடமலைசமுத்திரம் பகுதியில் கரடி தாக்கியதில் முருகன் என்பவா் உயிரிழந்தாா். தொடா்ந்து, 2 நாள்களுக்கு முன் திருப்பதியாபுரம் பகுதியில் சாலையில் சென்ற கரடியைப் பாா்த்து இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து ஒருவா் காயமடைந்தாா். திருப்பதியாபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி.இந்நிலையில், திருப்பதியாபுரம் பகுதியில் உள்ள முருகேசன் என்பவரது வீட்டு வளாகத்தில் கரடி நடமாடுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனா்.வனத்துறையினா் கரடி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.