நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: விற்பனையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

Wait 5 sec.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் நெகிழிப் பொருள்களை வைத்திருந்ததாக மொத்த விற்பனையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, அவற்றை பறிமுதல் செய்தனா். விக்கிரமசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுக நைனாா், பணியாளா்கள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த அம்பாசமுத்திரத்திம் தனியாா் நிறுவனத்திற்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.