வடமேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்குவங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்து 24 மணி நேரத்தில் வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.இதன் காரணமாக, இன்று(ஆக. 16) மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.The India Meteorological Department has stated that a new low-pressure area has formed over the northwest Bay of Bengal.கொடைக்கானலில் பலத்த மழை: நீரோடைகளில் தண்ணீா் வரத்து