திரிணமூல் காங். அலுவலகத்தில் முன்னாள் பேரவைத் தலைவர் தூக்கிட்டுத் தற்கொலை

Wait 5 sec.

மேற்கு வங்கத்தில் முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவருமான ஆஷிஷ் பானர்ஜி, 2001 முதல் 2026 வரையில் ராம்பூர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். மேலும், இவர் மாநில பள்ளிக் கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்ட அமைச்சர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.இந்த நிலையில், நடந்து முடிந்த 2026 பேரவைத் தேர்தலில் பாஜகவின் துருவா சாஹாவிடம் 24,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஆஷிஷ் பானர்ஜி தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து, இவர் அரசியலில் பெரிதாக எதுவும் ஈடுபடவில்லை எனக் கூறப்படுகிறது.இதனிடையே, திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் எம்எல்ஏ-க்கள், தலைவர்களுக்கு எதிராக ஊழல் தொடர்பான விசாரணைகளும் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், பீர்பூம் மாவட்டத்தில் ராம்பூர்ஹட்டில் உள்ள தனது இல்லத்துக்கு அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் ஆஷிஷ் பானர்ஜி தூக்கிட்ட நிலையில், இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டது. மேலும், அங்கிருந்து தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனைத் தொடர்ந்து, ஆஷிஷ் பானர்ஜியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நக்ஸல் மனநிலை! ராகுல் காந்தியை விமர்சித்த பாஜக!Former Bengal deputy speaker Ashis Banerjee found dead at TMC office in Birbhum