அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்புகளால் அமெரிக்க விசா நேர்காணலுக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க விசா நேர்காணலுக்கு பிறந்த குழந்தைகள் முதல் 17 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகள் நேரில் வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:சிறுவர்களுக்கான அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கிறீர்களா? உங்கள் குழந்தை பிறந்த குழந்தையாக இருந்தாலும் சரி, அல்லது ஏறக்குறைய 18 வயதை எட்டியவராக இருந்தாலும் சரி, அவர்கள் தூதரக நேர்காணலுக்கு நேரில் ஆஜராக வேண்டும். இது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கான நினைவூட்டல். நேரில் நடைபெறும் தூதரக நேர்காணல் அனைத்து வயதினருக்கும் கட்டாயம் என்று குறிப்பிட்டுள்ளது.மேலும், இதுகுறித்த விளக்க விடியோ ஒன்றும் அந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, 14 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான விசா நேர்காணலில் பெற்றோர்கள் மட்டும் நேரில் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பித்து விசா பெற்றுவந்த நிலையில் இந்தத் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.Applying for a minor’s U.S. visa? Whether your child is a newborn or almost 18, they must appear in person for the consular interview. This is a reminder for parents and guardians: the in-person consular interview is mandatory at every age. Watch the full video so you’re fully… pic.twitter.com/q3nKpprZCz— U.S. Embassy India (@USAndIndia) August 14, 2026ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன், ராகுலின் உருவ பொம்மைகள் எரித்துப் போராட்டம் நடத்தப்படும்!Changes to the rules for US visa interviews have been introduced following announcements by President Donald Trump.