முன்பே - டொவினோ தாமஸின் புதிய திரைப்படம்!

Wait 5 sec.

நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு முன்பே எனப் பெயரிடப்பட்டுள்ளது. தென்னிந்தியளவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் டொவினோ தாமஸ். பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர், இறுதியாக பள்ளிச்சட்டம்பி படத்தில் நடித்திருந்தார்.இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்ப்பை வெற்றியைப் பெறவில்லை. ஏஆர்எம் திரைப்படம் மூலம் ரூ. 100 கோடி வசூலித்த மலையாள நடிகர்களில் ஒருவர் என்கிற சாதனையையும் வைத்துள்ளார்.இந்த நிலையில், சைஜூ ஸ்ரீதரன் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘முன்பே’ எனப் பெயரிட்டுள்ளனர். பனோரமா ஸ்டூடியோஸ் உடன் இணைந்து டொவினோவும் இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல் எவ்வளவு?The new film starring actor Tovino Thomas has been titled 'Munpe'.