சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி(e-KYC) சரிபார்ப்பு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் கட்டாயமாக்கியுள்ளன.போலி எரிவாயு இணைப்புகளைக் கண்டறியவும், தகுதியானவர்களுக்கு மானியம் கிடைப்பதை உறுதி செய்யவும் இ-கேஒய்சி சரிபார்ப்பு பணிகளை கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.வீட்டில் இருந்தபடியே மொபைல் ஆப் மூலமாகவும், கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்றோ இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இ-கேஒய்சி எனப்படும் உண்மை சரிபார்ப்பு பணிக்கு,காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், கால அவகாசம் ஆக. 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆக. 23-க்குள் இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ளாவிட்டால், சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற முடியாத சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.The deadline for completing e-KYC verification for cooking gas cylinders, which was set to expire today, has been extended.வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!