ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு!

Wait 5 sec.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 4,500 கன அடியில் இருந்து 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 9,000 கனஅடி வரை அதிகரித்ததால் கடந்த திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் தடைவிதித்தது.இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் உபரிநீர்வரத்துக் குறைந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6,500 கன அடியாகவும், பின்னர் 6,000 கன அடியாகவும் குறைந்தது.இதையடுத்து மீண்டும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.நேற்று மாலை நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 4,500 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.The water inflow into the Cauvery River at Hogenakkal has increased from 4,500 cubic feet per second to 8,000 cubic feet per second.உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை!