நடிகர் சூர்யா நடிப்பில் உருவான அவரது 47-வது திரைப்படத்தின் முதல் போஸ்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் முழுமையாக நிறைவடைந்ததாக விடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டது.நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா - 47 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர். மேலும், இப்படத்திற்கு ‘சீனு’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனை இந்தாண்டு இறுதியில் திரைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார். அதனால், தீபாவளி வெளியீடாக வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் பெயர் போஸ்டர் இம்மாத இறுதிக்குள் வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என அடுத்தடுத்த வெற்றிகளைச் சூர்யா கொடுத்திருப்பதால் ஹாட்ரிக் வெற்றிக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டாக்ஸிக் - 12,000 திரைகளுக்கு மேல் வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம்?Information has been released regarding the first look poster of actor Suriya's 47th film.