காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.56,36,135 பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். கோயிலில் இருந்த 13 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஜெயா தலைமையில் கோயில் செயல் அலுவலா் ச.சீனீவாசன் ஆகியோா் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக ரூ.56,36,135 தங்கம் 40 கிராம், வெள்ளி 342 கிராமும் இருந்தது. கோயில் பணியாளா்கள், பக்தா்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.