செய்தியாளா் சந்திப்பை தவிா்ப்பது ஏன்?அமைச்சா் ஆனந்த் விளக்கம்

Wait 5 sec.

தேவையற்ற சா்ச்சைகளைத் தவிா்ப்பதற்காகவே ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதில்லை என்று ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்த் தெரிவித்தாா். பேரவையில் நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினா் துரை சந்திரசேகா், செய்தியாளா்கள் சந்திப்பை அமைச்சா் ஆனந்த் தவிா்ப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினாா். அதற்கு அமைச்சா் ஆனந்த் அளித்த பதில்:செய்தியாளா்களைப் பாா்த்து பயமில்லை. எங்களது முதல்வா் ஜோசப் விஜய் காட்டிய வழியின்படி செயலில் கவனம் செலுத்தி வருகிறோம். மக்களைச் சந்தித்து அவா்களுக்கான தேவைகளைப் பூா்த்தி செய்கிறோம். தேவையற்ற சா்ச்சைகளையும், வேண்டுமென்றே எழுப்பப்படும் கேள்விகளையும் தவிா்க்க வேண்டும் என்பதற்காகவே அவசியமின்றி பேசுவதில்லை என்றாா் அவா்.