எஸ்.டி. பிரிவில் குறும்பா் சமூகத்தை இணைக்க முயற்சி:அமைச்சா் செங்கோட்டையன்

Wait 5 sec.

குறும்பா் சமூகத்தை பழங்குடியினா் (எஸ்.டி.) பிரிவின் கீழ் இணைக்க தமிழக அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். பேரவையில் இதுதொடா்பாக சௌமியா அன்புமணி (பாமக) புதன்கிழமை முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளித்து அமைச்சா் செங்கோட்டையன் பேசியதாவது: இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து மத்திய அரசுக்குப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. குறும்பா் சமூகத்தை எஸ்.டி. பட்டியலில் இணைக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறோம் என்றாா் அவா்.இதேபோன்று, காட்டுநாயக்கா் மற்றும் கஞ்சம் ரெட்டி சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஜாதி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து சில உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். அவை குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.