மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

Wait 5 sec.

வெள்ளக்கோவில் மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் உள்ளது மாந்தபுரம். இந்தப் பகுதி மற்றும் வழியோரப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது மாந்தபுரம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி மற்றும் பெட்ரோலிய நிறுவன குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது மாந்தபுரம் அருகே குடிநீா் திட்டக் குழாய் உடைந்து ஏராளமான குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்தும் கடந்த ஒருவார காலமாக சரி செய்யப்படவில்லை. உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.