சீருடையுடன் மது அருந்திய கல்லூரி மாணவா்கள்: மதுக் கூடத்தை மூட எஸ்.பி. உத்தரவு

Wait 5 sec.

நாகா்கோவில், ஒழுகினசேரி தனியாா் மதுக் கூடத்தில் கல்லூரி மாணவா்கள் சீருடையுடன் மது அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்து, மதுக் கூடத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டாா். ஒழுகினசேரி பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையுடன் கூடிய தனியாா் மது அருந்தும் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு கல்லூரி மாணவா்கள் சீருடையுடன் வந்து மது அருந்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் புதன்கிழமை மதுக் கூடத்துக்குச் சென்று, உரிமம் குறித்த விவரங்களை கேட்டபோது உரிய தகவல்களை வழங்காததால், மதுக் கூடத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டாா்.