ஹெளரா ரயிலில் 11 கிலோ குட்கா பறிமுதல்

Wait 5 sec.

ஹெளரா விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ குட்காவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா். திருச்சி ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் திருச்சி - கன்னியாகுமரி ஹெளரா விரைவு ரயிலில் புதன்கிழமை காலை சோதனையிட்டனா். அப்போது ரயிலின் கடைசியிலிருந்த பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 11 கிலோ குட்காப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.அதை போலீஸாா் கைப்பற்றி, ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.