திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தலைமையில் துறை அதிகாரிகளுடன் பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.கள ஆய்வுக்குப் பின், காா்த்திகைப் பட்டியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு முன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை, மகளிா் திட்டங்களின் சாா்பில் 11 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.9,00,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கான காசோலைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி, முசிறி சாா்- ஆட்சியா் சுக்ஷி சுவாங்கி குந்தியா, உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல் ராகவன், மற்றும் தொட்டியம் வட்டாட்சியா் லஜபதிராஜ் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.