7-வது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி ஆஸ்திரேலிய மகளிரணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லண்டன் லார்ட்ஸ் திடலில் இன்று (ஜூலை 5) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய தொடக்க வீராங்கனைகளான எமி ஜோன்ஸ் 6 ரன்களிலும், டேனி வியாட் ஹாட்ஜ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து, கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் மற்றும் அலைஸ் கேப்சி ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இருப்பினும், அலைஸ் கேப்சி 20 பந்துகளில் 23 ரன்கள் (2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். நட்சத்திர வீராங்கனை ஹீதர் நைட் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.களமிறங்கியது முதலே ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 53 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் அதிரடி காட்டிய ஃபிரேயா கெம்ப் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் கிம் கார்த், லூசி ஹேமில்டன், சோபி மோலினக்ஸ் மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.பின்னர், 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை ஜியார்ஜியா வோல் பவுண்டரியுடன் அதிரடியாக ரன் கணக்கைத் தொடங்கினார். அவர் 9 ரன்களில் ஆட்டமிழக்க, விக்கெட் கீப்பர் பெத் மூனியும், போஃப் லிட்ச்ஃபீல்டு இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர்.7️⃣ are Women's #T20WorldCup champions once again pic.twitter.com/uiEDolJuzJ— ICC (@ICC) July 5, 2026இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 100 ரன்களைச் சேர்த்த நிலையில், லிட்ச்ஃபீல்டு 48 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் கடந்த பெத் மூனி 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 17.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெர்ரி 13 ரன்களுடனும், கார்ட்னர் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.கடந்தாண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதியில் தோற்று வெளியேறிய சாம்பியன் ஆஸ்திரேலியா அணி, மகளிருக்கான 9-வது டி20 உலகக் கோப்பைத் தொடரில் 7-வது முறையாகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. மேலும், புதிய கேப்டனான சோஃபி மாலினக்ஸ் தலைமையில் முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளது.இதுவரை ஐசிசி உலகக்கோப்பையின் 15 இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய மகளிரணி 13-வது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.சர்வதேச டி20 போட்டிகளில் அக்ஷர் படேல் புதிய சாதனை!Australia produced a ruthless, dominant performance to crush England and win a record-extending seventh Women's T20 World Cup title with a seven-wicket victory at Lord's Cricket Ground.