சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற திமுக தலைமை நிலையச் செயலர் துறைமுகம் காஜா இல்ல திருமண நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாழ்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது இருவரும் அருகருகே அமர்ந்து உரையாடினர். தொடர்ந்து நிகழ்வில் பேசிய உதயநிதி, இன்று சில பேர் சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சென்று விட்டனர். ஆனால் நீங்கள் அத்தனை பேரும் நாங்கள் என்றைக்கும் திமுகவுடன் இருப்போம் என்று உறுதியாக வந்துள்ளீர்கள். இஸ்லாமியர்களுக்கும் கழகத்துக்கும் இடையிலான உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. யார் என்ன சொன்னாலும், எந்த அவதூறுகளைப் பரப்பினாலும் சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் காவல் அரணாக திமுக நிற்கும். அரசியல் பேரிடரில் இருந்து தமிழ்நாட்டை நிச்சயம் தலைவர் மீட்டெடுப்பார். இவ்வாறு குறிப்பிட்டார். வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி