அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி டி20 கிரிக்கெட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 500 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் வாஷிங்டன் ப்ரீடம் அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார். சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணிக்கு எதிராக அரைசதம் கடந்தார். இதன் மூலம் அவர் இந்தத் தொடரில் 500 ரன்களை கடந்துள்ளார். லாஸ் ஏஞ்சலீஸில் போமோனா கிரிக்கெட் திடலில் சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் - வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வாஷிங்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ 19.3 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் மேத்திவ் ஷார்ட் 39 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் ப்ரீடம் அணி சார்பாக பந்துவீச்சில் ஜேக் ஹெட்வர்ட்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 56 ரன்கள் எடுத்தார். இத்துடன் 500 ரன்களையும் கடந்து சாதனை படைத்துள்ளார். பாஃப் டு பிளெஸ்ஸி அதிகபட்சமாக 1,128 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.எம்எல்சி தொடரில் 2024 தொடரில் கோப்பை வென்ற ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் அணி, 2025ல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது. தற்போது, 2026 சீசனில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. A major milestone Steve Smith reaches 500 runs in his Major League Cricket career ☄️ pic.twitter.com/JhgBD4Yjls— Cognizant Major League Cricket (@MLCricket) July 5, 2026தங்கக் காலணி விருதுக்கான போட்டியில் மெஸ்ஸியை சமன்செய்த எம்பாபே!Steve Smith crosses the 500-run mark in the MLC tournament! Moves up the points table!