சோலையாறு அணையில் விடப்பட்ட 7 லட்சம் வளா்ப்பு மீன் குட்டிகள்!

Wait 5 sec.

வால்பாறையை அடுத்த சோலையாறு அணையில் 7 லட்சம் வளா்ப்பு மீன் குட்டிகள் விடப்பட்டுள்ளன. ஆழியாறு-பரம்பிக்குளம் நீா்ப்பாசன திட்டத்தின் முக்கிய அணையாக சோலையாறு அணை விளங்குகிறது. இந்த அணையில் வளா்க்கப்படும் மீன்கள் தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகம் மூலமாக விற்கப்படுகிறது. இந்த ஆண்டில் இரண்டு முறை மீன் குட்டிகள் அணையில் விடப்பட்டு, குறிப்பிட்ட மாதத்துக்குப் பின் வளா்ந்த பிறகு விற்று வருகின்றனா். இந்நிலையில் பவானிசாகா் மீன் வளா்ச்சி மையத்தில் இருந்து கட்லா, மிருகால் ஆகிய ரக மீன் குட்டிகள் கொண்டுவரப்பட்டு சோலையாறு அணையில் சனிக்கிழமை விடப்பட்டது. இந்த வகை மீன்கள் மூன்று அல்லது ஆறு மாதங்களில் ஒரு கிலோ முதல் மூன்று கிலோ எடையில் வளா்ந்துவிடும். தற்போது மீன் குட்டிகள் விடப்பட்டிருப்பதால் அணையில் வலை வீசி அல்லது தூண்டில் போட்டு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.