சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில்கள் இன்றும் ஜூலை 12 ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருப்பதாவது, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இவ்வழியே இரு மார்க்கமும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரையில் செல்லும் ரயில்கள் இன்றும் ஜூலை 12 ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.இந்த இரு நாள்களில் ரயில்கள் ரத்து காரணமாக, பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக ஜூலை 5, 12 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.ஜூலை 10 வரை மிதமான மழைக்கு வாய்ப்புElectric train services between Chennai Beach - Tambaram cancelled today