முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான பழமுதிர்சோலையில் இன்று காலை வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது.மதுரை திருமாலிருஞ்சோலை அழகர் கோயில் மலையில் முருகப்பெருமானின் பழமுதிர்சோலை அமைந்துள்ளது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்பாலிக்கும் ஒரே தலம் பழமுதிர்சோலை மட்டுமே.பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் குடமுழுக்கு நடத்த கடந்த சில மாதங்களாக தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதனிடையே, ஜூன் 30 ஆம் தேதியில் மஹா கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள், கோவில் வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிலையில், இன்று காலை (ஆனி 21 - ஜூலை 5) சுமார் 6 மணியளவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.கோவில் நிர்வாகத்தினரும், இந்து சமய அறநிலையத் துறையினரும் இணைந்து கோயில் குடமுழுக்குக்கான ஏற்பாடுகளை செய்தனர்.கோயில் குடமுழுக்கு விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர். மேலும், இந்த விழாவில் அமைச்சர் நிர்மல் குமாரும் கலந்து கொண்டார். குடமுழுக்கு விழாவில் பக்தர்களின் கூட்டத்தை வழிநடத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து: கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கம்The Maha Kumbabishekam of the renowned Pazhamudircholai Solaimalai Murugan Temple, is being held today