பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 16 அணிகளுக்கான சுற்றில் பிரேசில் - நார்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் நார்வே அணி வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றது. நாக் அவுட் சுற்றில் தோல்வி அடைந்த பிரேசில் அணி தொடரிலிருந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர்(34) சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நார்வேயிடம் தோல்வியுற்ற பிரேசில் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை கண்ணீருடன் அறிவித்துள்ளார். “நான் முயற்சி செய்தேன். இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. நான் இங்கேதான் தொடங்கினேன், இங்கேயே முடித்தேன்” என ஓய்வு குறித்து உருக்கமாக அவர் பேசியுள்ளார். 2010ஆம் ஆண்டு பிரேசில் அணிக்காக அறிமுகமான நெய்மர் 129 போட்டிகளில் 80 கோல்கள் அடித்துள்ளார்.தனது கடைசி ஆட்டத்தில் நெய்மர் பெனால்டி கிக் மூலம் பிரேசில் அணிக்கு கோல் பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.