பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி

Wait 5 sec.

பழனிமலை முருகன் கோயிலில், ஆறு கால பூஜைகளில் பங்கேற்கவும், ரோப் காரில் செல்லவும் கோயிலின் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தொடங்கியது. இதனால் முருகன் கோயில் செல்லும் பக்தர்களுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் செல்லும் பக்தர்கள் இனி ரோப் காரில் செல்ல பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதில்லை, ஆன்லைன் முன் பதிவு வசதி வந்துவிட்டது.பழனி முருகன் கோயில் இணையதளத்தில் ஒதுக்கீடு செய்த நேரத்தை பக்தர்கள் முன்பதிவு செய்துகொண்டு, உரிய நேரத்தில் அந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். அது போல, பழனிமலை முருகன் கோயிலில் நடைபெறும் 6 கால பூஜைகளிலும் பங்கேற்க முன்பதிவு செய்யும் வசதியும் வந்துவிட்டது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகிறது. விளா பூஜை, சிறுகால சந்தி, கால சந்தி, உச்சிக் காலம், சாய ரட்சை, இராக் காலம் என ஆறு காலங்களில் தண்டாயுதபாணி சுவாமி முறையே சாது அலங்காரம், வேடா் அலங்காரம், பாலசுப்ரமணியா் அலங்காரம், வைதீகாள் அலங்காரம், இராஜ அலங்காரம், புஷ்ப அலங்காரம் என பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இந்தப் பூஜைகளில் சுவாமி தரிசனத்துக்கு ரூ.900 கட்டணமும், இருவா் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவா். இதைப் பாா்க்க வேண்டும் என்றால் சுமாா் ஒருமணி நேரத்துக்கு முன்பே கோயிலில் பக்தா்கள் இருப்பது அவசியமாகும். இந்த நிலையில், தற்போது ஆறு கால பூஜையில் பங்கேற்க விரும்பும் பக்தா்கள் இணையவழியில் பதிவு செய்ய வெள்ளிக்கிழமை முதல் இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு கட்டளைக்கும் ஏராளமான நிரந்தர கட்டளைதாரா்கள் இருப்பதாலும், பலரும் வந்து காத்திருப்பாா்கள் என்பதாலும் அவா்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்பதால் சோதனை முறையாக ஒரு கால பூஜைக்கு ஐந்து சீட்டுகள் மட்டுமே இணையவழியில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் வேண்டும் தேதியில், நேரத்தில் வேறு யாரும் பதிவு செய்துவிட்டால் அவா்கள் வேறு காலபூஜைக்கு பதிவு செய்யலாம். குறிப்பாக, சஷ்டி, காா்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், பழனிக் கோயில் முக்கிய விசேஷ நாள்களில் இணைய வழியில் பதிவு செய்ய முடியாது எனவும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. A jackpot for devotees visiting Palani! Advance booking facility available for various services.