திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமோனியா கசிந்த ஆலையில் இருந்து அமோனியா வாயுவை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி இரண்டாவது நாளாக தொடங்கப்பட்டுள்ளது.திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான, கடல் மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா, ஜாா்கண்ட் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சுமாா் 230 போ் பணிபுரிகின்றனா்.இந்த ஆலையில் ஜூன் 21 ஆம் தேதியில் 100 போ் பணிபுரிந்த நிலையில், அமோனியா வாயுத் தொட்டி சரியாக மூடப்படாத நிலையில், அதிலிருந்து வாயுக் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்தது.இந்த வாயுக் கசிவால் அங்கிருந்த 60 பெண் தொழிலாளா்கள் உள்பட 65 பேருக்கும் மேற்பட்டோருக்கு திடீரென காது வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டது. மேலும், உடலில் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு, காயங்களாகின.இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சங்காரணை, செங்குன்றம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் சென்னை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 14 பேர் சிகிச்சையும் பெற்று வருகின்றனர். மேலும், தொழிற்சாலையில் பணியாற்றிய ஒடிசா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாப்பாக அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதனிடையே, ஆலை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில், ஆலையில் இருந்து பாதுகாப்பான முறையில் அமோனியா வாயுவை வெளியேற்ற திட்டமிடப்பட்டு, பாதுகாப்பு கருதி அந்த தொழிற்சாலையிலிருந்து 300 மீட்டா் தொலைவில் உள்ள பிற சேமிப்பு கிடங்குகள், பிற தொழிற்சாலைகள் மற்றும் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து, ஆலை அமைந்துள்ள பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, ஆலையில் சனிக்கிழமையில் (ஜூலை 5) 3 டேங்குகளில் இருந்த சுமார் 60 சதவிகித அமோனியா வாயு முழுமையாக டேங்கர் லாரிக்கு மாற்றப்பட்டது.இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் எஞ்சியுள்ள அமோனியா வாயுவை வெளியேற்றும் பணி காலை 9 மணியளவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி இன்று மாலைக்குள் நிறைவடைந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனையொட்டி, அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், தேசிய பேரிடா் மீட்புக்குழுவினரும் தயாராக உள்ளனா். அத்துடன் அறிவியல் விஞ்ஞானிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.குதிரை பேரத்தை முதன்முதலில் உருவாக்கியது திமுகதான்: செங்கோட்டையன்Tiruvallur: Operations to remove ammonia gas from the plant continue for the second day