போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றனர் புதின், ஸெலென்ஸ்கி: டிரம்ப்

Wait 5 sec.

ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அந்த நாட்டு அதிபர்கள் விரும்புகின்றனர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷியா - உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டு வருகிறார்.இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றனர். அவர்களிடம் இதுகுறித்து பேசிக்கொண்டு இருக்கிறேன். நான் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். இந்த ரஷியா - உக்ரைன் போர் எளிதாக முடிந்திருக்கும். ஏனென்றால், எனக்கு இரு தரப்புத் தலைவர்களையும் தெரியும். நான் இந்தியாவையும், பாகிஸ்தானையும் கையாண்டிருக்கிறேன். அணு ஆயுதம் போன்ற மிகவும் மோசமானதாக இருந்திருக்கக்கூடிய மற்ற போர்களையும் கையாண்டிருக்கிறேன்.ஆகவே, இந்த ரஷியா - உக்ரைன் போரையும் நான் விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.உக்ரைன் போருக்கு முடிவு: டிரம்ப் புதிய முயற்சி! புதின், ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை!US President Donald Trump has stated that the presidents of Russia and Ukraine wish to bring the war between their countries to an end.