மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின்போது, சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரைக் குடித்துப் பார்த்து முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 6) ஆய்வு செய்தார். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் இயங்கிவரும், நாளொன்றுக்கு 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், பேரூரில் ரூ.5814.57 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடிநீர், பூண்டி, சோழவரம், புழலேரி, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மூலமும், நெம்மேலியில் உள்ள 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலமும் நாளொன்றுக்கு 1,230 மில்லியன் லிட்டர் குடிநீர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.பொதுமக்களின் தேவைக்கேற்ப, கூடுதலாகக் குடிநீர் வழங்கும் பொருட்டு, பேரூரில் 5814.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட, கடல்நீரைக் குடிநீராக்கும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.நெம்மேலியில் இயங்கிவரும் நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின், கடல்நீரை உட்கொள்ளும் தொட்டியின் (Intake Sump) செயல்பாடுகளைப் பார்வையிட்டார்.நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் எதிர்மறை சவ்வூடு பரவல் நிலையத்தின் (RO Building) செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பேரூரில் அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாம்பரம் மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அருகாமையிலுள்ள 20 ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள 22.67 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.நெம்மேலியில் இயங்கிவரும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை சிறந்த முறையில் பராமரித்து, பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றி தொடர்ந்து குடிநீர் வழங்கிட வேண்டுமென்றும், பேரூரில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்Seawater Desalination Project Chief Minister Vijay inspects by tasting the water