கல்லெறிந்த தன்ன கயவர்வாய் இன்னாச் சொல்எல்லாருங் காணப் பொறுத்து, உய்ப்பர்}ஒல்லைஇடுநீற்றாங் பையவிந்த நாகம்போல், தத்தம்குடிமையான் வாதிக்கப் பட்டு.(பாடல் 66 அதிகாரம்: சினம் இன்மை) மந்திரித்து இட்ட திருநீற்றினால் படம் அடங்கின நாகப் பாம்பைப் போலத் தங்கள் தங்கள் குடிமையின் தகுதி காரணமாக வருத்தப்பட்டுக் கயவர் வாயினின்றும் வந்து கல்லால் எறிந்தது போலத் தாக்குகின்ற கொடுமையான சொற்களையும், யாவரும் காணும்படியாகப் பொறுத்துத் தமது தகுதியை நிலைபெறுத்துவார்கள் சான்றோர்கள்.