ஐகியூ 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகாது? காரணம் என்ன?

Wait 5 sec.

ஐகியூ 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளதாக நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக தயாரிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் அடுத்த ஆண்டு வெளியாகலாம் எனவும் தகவல் தெரிகிறது. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐகியூ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை வழங்கி வருகிறது. இதனிடையே சமீபத்தில் அறிமுகமான ஐகியூ 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என பயனர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலான செய்தி வெளியாகியுள்ளது.உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக, குறிப்பாக நினைவக அட்டைகள் விலை உயர்வால், ஐகியூ 16 ஸ்மார்ட்போன் தயாரிப்பு எண்ணிக்கையை குறைக்க ஐகியூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தியாவில் ஐகியூ 16 வெளியாகாது எனக் கூறப்படுகிறது. பட்ஜெட் விலையில் உருவாகும் ஸீ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மட்டுமே வெளியிட ஐகியூ திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகள் வெளியாகாது எனத் தெரிகிறது. புராசஸர்களுக்கு புகழ் பெற்ற நிறுவனம் 2020 ஆம் ஆண்டு ஐகியூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் தனித்துவமான அம்சங்கள் மூலம் குறுகிய காலத்தில் இந்திய பயனர்களிடையே ஐகியூ தயாரிப்புகள் பிரபலமடைந்தன.வேகமான சார்ஜர், ஃபிளாக்‌ஷிப் புராசஸர், கேம்களை மையப்படுத்திய அம்சங்கள் போன்றவை ஐகியூ புகழ் பெறக் காரணமாக இருந்தன. இதனால் கேம் பிரியர்கள் பலரின் விருப்பத் தேர்வாக ஐகியூ ஸ்மார்ட்போன் உள்ளது. 2025 நவம்பரில் வெளியான ஐகியூ 15 விலை ரூ. 72,999. இது இதற்கு முன்பு வெளியான ஐகியூ 13 ஸ்மார்ட்போனை விட விலை (ரூ. 54,999) அதிகமாகும். புதிதாக வெளியாகவுள்ள ஸ்மார்ட்போனில் 7,000mAh பேட்டரி, ஸ்நாப்டிராகன் 8 எலைட் 5 ஆம் தலைமுறை சிப்செட், அமோலிட் தொடுதிரை போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வாட்ஸ்ஆப்பில் ஆன்லைனில் இருந்தால் இனி எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்!iQOO 16 may not launch in India as rising component costs hit smartphone plans