அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் பெ. சண்முகம் திங்கள்கிழமை (ஜூலை 6) விமர்சித்துள்ளார்.அமெரிக்காவின் 250-வது சுதந்திர நாள் விழாவில் நேற்று பேசிய டொனால்ட் ட்டிரம்ப், “கம்யூனிம் என்பது அமெரிக்கா எதிர்கொண்டிராத மிகப்பெரிய சவால் அது ஒரு மரண அச்சுறுத்தல். நாட்டில் கம்யூனிசத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவேன். அமெரிக்காவில் கம்யூனிசத்துக்கு இடமில்லை” என்று பேசினார்.இதுகுறித்து பெ. சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:உலகத்துக்கே அவர்தான் தலைவன் என்ற நினைப்பில் கம்யூனிசத்தை ஒழித்தே தீருவேன் என்று கொக்கரிக்கிறார் டிரம்ப். கம்யூனிசத்தை எவராலும் அழிக்க முடியாது. உலகில் சுரண்டல் இருக்கும் வரை கம்யூனிசமும் இருக்கும். வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! ஹிட்லர், முசோலினிகளின் கதை முடிந்ததே தவிர, கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. உங்கள் வாய்க்கொழுப்புதான் உங்களுக்கு முதல் எதிரி! என்று பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.உலகத்திற்கே தான் தான் தலைவன் என்ற நினைப்பில் கம்யூனிசத்தை ஒழித்தே தீருவேன் என்று கொக்கரிக்கிறார் டிரம்ப்.கம்யூனிசத்தை எவராலும் அழிக்க முடியாது. உலகில் சுரண்டல் இருக்கும் வரை கம்யூனிசமும் இருக்கும். வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்!ஹிட்லர், முசோலினிகளின் கதை முடிந்ததே… pic.twitter.com/ly4kGutf8b— Shanmugam P (@Shanmugamcpim) July 6, 2026தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!P. Shanmugam, the Tamil Nadu State Secretary of the Communist Party of India (Marxist), criticized U.S. President Donald Trump's remarks on Monday (July 6).