இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் கொடுமை தொடர்பான விளம்பரங்கள் தோன்றியதாக விளக்கம்கோரி மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்பான விளம்பரங்கள் தோன்றுவதாக மத்திய அரசுக்கு புகார் வந்தது. இதனையடுத்து, சமூக ஊடக நிறுவனமும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவின் உள்ளடக்கக் கட்டுப்பாடு மற்றும் விளம்பர அமைப்புகள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், இது தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் உள்ளடக்கங்களையும் முடக்குமாறு இன்ஸ்டாகிராமுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதுபோன்ற விளம்பரங்கள் எப்படி அங்கீகரிக்கப்பட்டு, தளத்தில் காட்டப்பட்டன என்பது குறித்து மெட்டா நிறுவனத்திடம் 7 நாள்களுக்குள் விரிவான விளக்கம் கோருமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ராகுல் காந்தி மீது கூட்டணிக் கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை: பாஜக Govt Issues Stern Notice To Meta On Child Sexual Abuse Material In Instagram Ads