மூன்று நாள்களில் கட்டா குஸ்தி - 2 வசூல் இவ்வளவா?

Wait 5 sec.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி - 2 திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் செல்ல அய்யாவு ஆண் - பெண் உறவுச் சிக்கலுடன் பெண்களை ஆண்கள் மதிக்க வேண்டும் என்பதை மையப்படுத்திய குஸ்தியாக கதையாக உருவாக்கியிருந்தார். முதல் பாகத்தைப் போலவே கமர்சியல் அம்சங்களுடன் கூடிய திரைப்படமாகத் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முக்கியமாக, நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் மோக்‌ஷாவின் காட்சிகள் ரசிக்கப்பட்டு வருவதால் படக்குழுவும் நம்பிக்கையுடன் உள்ளனர்.இதனால், இரண்டாம் பாகமும் வணிக ரீதியான வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்டா குஸ்தி - 2 மூன்று நாள் வசூலாக ரூ. 15 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்தின் வசூலைவிட இரண்டாம் பாகம் மிக அதிகமாக வசூலிக்கும் என்றே தெரிகிறது. பிஆர் ஷோ! தயாரிப்பாளரான பிரதீப் ரங்கநாதன்! Details regarding the three-day box office collection of the film Gatta Kusthi 2, starring actor Vishnu Vishal, have been released.