புதுதில்லி: ஜவுளித் தயாரிப்பு நிறுவனமான 'ஆஸ்தா ஸ்பின்டெக்ஸ்' பங்குகள், பங்குச் சந்தைகளில் ஏமாற்றமளிக்கும் வகையில் அறிமுகமானாலும், இறுதியில் எவ்வித மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தன.நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு விலையான ரூ. 136 லிருந்து 4.41 சதவீதம் சரிந்து ரூ. 130-க்கு வர்த்தகத்தைத் தொடங்கியது.பிறாகான வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில், 0.33% உயர்ந்து ரூ. 136.45 ஆக உயர்ந்தது. அதே வேளையில், நிஃப்டி-யில் இந்த பங்குகள் 0.36 சதவீதம் உயர்ந்து ரூ. 136.49 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தன.இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 602.32 கோடியாக இருந்தது.ரூ. 125 முதல் ரூ. 136 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ. 170 கோடி மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீட்டை நிறுவனம் சமீபத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த வெளியீடு மூலம் ஒட்டுமொத்தமாக 4.64 மடங்கு சந்தா பெறப்பட்டது.