தன்னிடமுள்ள யானைத் தந்தங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லால் முடிவு!

Wait 5 sec.

நடிகர் மோகன்லால் தன்னிடமுள்ள யானைத் தந்தங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். மலையாள சினிமாவின் முகங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் மோகன்லால் கலைப்பொருள்களைச் சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு அளிக்கப்பட்ட பல கலைப்பொருள்களைப் பத்திரமாக பாதுகாத்தும் வருகிறார். அதேநேரம், அவரும் தனிப்பட்ட முறையில் வாங்கவும் செய்திருக்கிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனையில் மோகன்லாலிடமிருந்து யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, பல ஆண்டுகளாக நீடித்த வழக்கில் தற்போது வனத்துறையிடம் மன்னிப்பு கோரும் வகையில் நடிகர் மோகன்லால் தன்னிடமுள்ள 2 ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் அவற்றால் செய்யப்பட்ட 13 வகை கலைப் பொருள்களைக் கேரள வனத்துறையிடம் ஒப்படைக்க விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்த ஏன் வரவில்லை? கண்கலங்கிய ஊர்வசி! Actor Mohanlal has decided to hand over the elephant tusks in his possession to the Forest Department.