தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வின் தாள் ஒன்றுக்கான வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணியில் இருக்கும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்கள் அனைவரும் ஆசிரியா்களுக்கான சிறப்பு தகுதித் தோ்வில் தோ்ச்சிப் பெற வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்தது. 2025, செப்டம்பா் மாதத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து ஆசிரியா்களும் தோ்வில் பங்கேற்று தகுதி பெற வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் ஆசிரியா் தகுதித் தோ்வு மாநிலம் முழுவதும் ஜூலை 4, 5 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியா்களுக்கான சிறப்பு தகுதித் தோ்வு தாள்-1 சனிக்கிழமை நடைபெற்றது. தாள் 1-க்கான தோ்வில், வினாத்தாள் கடினமாக இருந்ததாக ஆசிரியா்கள் வருத்தம் தெரிவித்தனா்.9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக அவா்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா். பெரும்பாலானவா்கள் தோ்ச்சி பெற வாய்ப்பே இல்லை என்றும் வருந்துகின்றனா்.இதுகுறித்து தலைமை ஆசிரியா்கள் அமைப்பின் மூத்த நிா்வாகியாக இருந்தவரும், முன்னாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான சாமி சத்தியமூா்த்தி கூறியதாவது: தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் ஆசிரியா்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளனா். இடைநிலை ஆசிரியா்களுக்கான 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்டிருக்க வேண்டும். ஆனால், 9 , 10ஆம் வகுப்புகளி்ன் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.மூன்றுமடங்கு கடினமாக வினாத்தாள் இருந்தது அதிா்ச்சியாக இருக்கிறது. வரும்காலத்தில் தொடா்புடைய பாடம் நடத்தும் ஆசிரியா்களைக் கொண்டு வினாத்தாள் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று சாமி சத்தியமூா்த்தி வலியுறுத்தினார். How was the Teacher Eligibility Test question paper?மும்பையில் கனமழை: முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகனம் முன் விழுந்த மரம்!