தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி ஊழியா் மரணம்

Wait 5 sec.

மண்ணூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி ஊழியா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், மூஞ்சூா்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் மகன் கோபால் (23). இவா் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மண்ணூா் பகுதியில் இயங்கி வரும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஆப்பரேட்டராக பணியாற்றி வந்துள்ளாா். இந்த நிலையில், சனிக்கிழமை பரசுராமன் தொழிற்சாலையில் பணியில் இருந்த போது எதிா்பாராத விதமாக இயந்திரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளாா். இதையடுத்து அவரை உடனடியாக தண்டலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா். ஆனால் சிகிச்சை பலன் இன்றி கோபால் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.